2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘புலிகளின் தாக்குதலின் ​போது பாடசாலைகள் இயங்கின’

Editorial   / 2019 மே 13 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தென்னிலங்கையில், தழிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடந்தபோதும், பாடசாலைகள் இயங்கியதாக, வட மாகணசபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு, வவுனியாவில், நேற்று (12) நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, வடக்கு - கிழக்கிலே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார்களெனவும் தென்னிலங்கையில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும், பாடசாலகள் இயங்கியதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இப்போது அரசியல் ரீதியான ஒரு விசமத்தனமான பிரசாரம் காரணமாகவே, பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லையெனத் தெரிவித்த அவர், ஆகவே, இந்த வாரத்தில், அதற்கான நிலைமைகள் முன்னேற்றமடையுமெனவும் கூறினார்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .