2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புழல் சிறையில் இலங்கை மீனவர்கள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 17 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரையும் இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்திய கடற்படையினர் நேற்று (16) இவர்களை கைது செய்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று (17) காலை பொலிஸார் இராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், ஆண்டனி ஹேமா நிஷாந்தன், இம்மானுவேல் நிக்சன், துருவந்தா ஸ்ரீலால், சுதீஷ் சியான் ஆகியோரே இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர்.இவர்களிடம் இருந்து ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணைக்காக தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு அவர்களிடம் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 5 இலங்கை மீனவர்களும் இன்றைய தினம் திங்கட்கிழமை (17) காலை 10 மணி அளவில் பொலிஸார் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்  ஆஜர்பகுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி இலங்கை மீனவர்கள் 5 பேரையும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குறித்த 5 இலங்கை மீனவர்களும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .