Freelancer / 2023 பெப்ரவரி 06 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் உள்ள கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்த முடியாது இருப்பதாக முழங்காவில் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முழங்காவில் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உள்ள போதிலும்
மேய்ச்சல் தரவைகள் இல்லாததன் காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்கள்
நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
முன்னர், முழங்காவில் குளத்தின் மேற்பகுதியில், கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்தக் கூடிய நிலைமை இருந்தது. வனவளத் திணைக்களத்தின் செல்வாக்குடன் பத்து பேர்வரை தற்போது குளத்தின் மேற்பகுதியில் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக, முழங்காவில் கால்நடைகளை குளத்தின் மேற்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுத்த முடியாத நிலைமை தற்போது காணப்படுகின்றது.
பூநகரியை பொறுத்தவரையில், மேய்ச்சல் தரவைகளுக்கான நிலங்கள் இதுவரை இனங்காணப்படவில்லை. பூநகரி கால்நடை வளர்ப்பாளர்கள், நீண்ட தூரம் கால்நடைகளை கொண்டு வந்து சுன்னாவில்குளம், ஜெயபுரம் வடக்கின் திக்குவில்குளம் ஆகிய குளப் பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடுத்துகின்றனர். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை, பயிர்ச் செய்கை காலங்களில் மேய்ச்சலில் ஈடுபடுத்துவதில் நெருக்கடி காணப்படுகின்றது என கால்நடை வளர்ப்பாளர்களால் தெரிவிக்கப்படுகின்றது. R
16 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
1 hours ago