Freelancer / 2022 ஒக்டோபர் 15 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று காலை பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் 47 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி சென்று கொண்டிருந்த மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரை ஏற்றி பயணித்த பேருந்துடன், பின்னால் பயணித்த டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
8 minute ago
12 minute ago
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
21 minute ago
27 minute ago