2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பொங்கல் உற்சவத்துக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி – கரைச்சி, புளியமபொக்கணை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், நாளை (21) இரவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியகியுள்ளன.

இதற்கமைய, நாளை இரவு பொங்கல் பொங்குவதற்காக, பாரம்பரிய முறைப்படி மீசாலை - புத்தூர் சந்தி, பண்டமரவடியில் இருந்து மடைப் பண்டம் மாட்டு வண்டிகளில் எடுத்து வருவதற்காகச் சென்ற தொண்டர்கள், இன்று கோவிலை வந்தடையவுள்ளனர்.

இந்த உற்கவத்துக்காக, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம் பெயர் தேசங்களிலிருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கான சகல ஏற்பாடுகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .