Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில்குளம், நொங்குவெட்டி ஐயனார் கோவிலில், இம்முறை நடைபெறவுள்ள வருடாந்த பொங்கல் விழாவில், பல வருடங்களாக நடை முறையில் இருந்த வழமைகள் மாற்றப்பட்டு, சவரிகுளம் பகுதியில் வசிக்கும் மக்களை சமூக ரீதியாக அடக்கி ஒடுக்க முற்சிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக, சவரிகுளம் கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அனைவரும் கையொப்பமிட்ட மகஜரொன்றை, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்ராஸுக்கு, நேற்று (06) அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தொடர்ந்துரைத்த சவரிகுளம் பகுதி மக்கள், குறித்த கொவிலில், வருடாந்த பொங்கல் நிகழ்வு இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதுவரை காலமும் இருந்த பழைய முறைமுகளை மாற்றி, “பட்டோலை” அங்கத்தவர்கள் மட்டுமே, கோவில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதே பகுதியில் உள்ள தம்மை எவ்விதமான கோவில் வேலைகளிலும் ஈடுபடக் கூடாதெனவும், கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.
கடந்த வருடமும், வேறு கோணத்தில் நேர்த்திக்காக காவடி எடுத்த தமக்கு பல்வேறு விதமான நெருக்கடி கொடுத்ததுடன், சாதிய ரீதியாக வகைப்படுத்தியதாகத் தெரிவித்த அவர்கள், அன்னதான மடத்திலும் தம்மை உணவு பரிமாறக்கூடாதெனவும் தம்மைப் புறக்கணித்ததாகவும் சுட்டிக்காட்டினர்.
எனவே, இந்தக் கோலவில், இந்து, கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கோவிலெனத் தெரிவித்த அவர்கள், இவ்வாறான பொதுக் கோவிலில், ஒரு பிரிவினர் மட்டும் உரிமை கோருவது நியாயமா எனவும் கேள்வியெழுப்பினர்.
எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டாவிட்டால், சத்தியாகிரகப் போராட்டம் நடத்த உத்தேசித்துள்ளதாகவும், அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .