2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பொது வைத்தியநிபுணர் நியமனம்

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முழங்காவில் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கு, வரலாற்றில் முதல் தடவையாக பொது வைத்தியநிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், அடுத்த வாரம் முதல் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

கிளிநொச்சி - பூநகரிப் பிரதேசத்துக்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், முழங்காவில், இரணைதீவு, பல்லவராயன்கட்டு, ஜெயபுரம், வன்னேரிக்குளம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் ஒரு ஆதார வைத்தியசாலை காணப்பட்டாலும், உரிய ஆளணி, பௌதீக வளப்பற்றாக்குறைகள் காரணமாக மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரங்களின் மத்தியில் 60 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை, சாவகச்சேரி வைத்தியசாலை என்பவற்றுக்குச் சென்றே சிகிச்சைகளைப் பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .