2021 மே 08, சனிக்கிழமை

’பொத்துவில் - பொலிகண்டி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம்’

Niroshini   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்
 
 
 
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்த தலைவி ம.ஈஸ்வரி உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்து வரும் போராட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து எவரும் கலந்துகொள்ளக்கூடாது என, முல்லைத்தீவு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
 
இன்று காலை, முல்லைத்தீவு மாவட்டக்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரியின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார், இது தொடர்பிலான உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், கையெழுத்து ஒன்றும் வாங்கிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X