2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் செயற்பாட்டுக்கு எதிராக தனிநபர் ஒருவர் உண்ணாவிரதம்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி - ஊற்றுப்புலம் சந்தியில், தேனீர் கடை நடத்தி வருகின்ற நபரொருவர், பொலிஸாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, இன்று (23) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

ஒக்டோபர் 13ஆம் திகதியன்று, குறித்த தேநீர் கடைக்குள் புகுந்து, உரிமையாளரின் மகனை வாளால் வெட்ட முற்பட்ட நபரொருவரை, வாளுடன் மடக்கிப்பிடித்து, பொலிஸாரிடம் கையளித்த போதும், பொலிஸார் அந்நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்று  (22), 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழுவினர், குறித்த தேனீர் கடைக்குள் புகுந்து, உரிமையாளரின் மகனை வாளால் வெட்டியதோடு, கடையையும் சேதமாகியுள்ளனர்.

எனவே, இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பொலிஸாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கடை உரிமையாளர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

இவருக்கு ஆதரவுத் தெரிவித்து, ஊற்றுப்புலம் சந்தியில் வியாபார நிலையங்களை நடத்துகின்ற ஏனையவர்களும், தங்களின் வியாபார நிலையங்களை பூட்டி எதிர்ப்பை வௌயட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .