2025 மே 17, சனிக்கிழமை

பொலிஸாரின் தலையீட்டால் போராட்டம் கைவிடப்பட்டது

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, சட்டவிரோத வெடிபொருள்களை (கட்டுத்துவக்கு) பயன்படுத்துவதற்கு எதிரப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால், நேற்று (23) முன்னெடுக்கப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம்,  பொலிஸாரின் தலையீட்டால் கைவிடப்பட்டது.

தேராவில் கிராமத்தில், சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி பயன்பாட்டாளர்களால், கால்நடை வளர்ப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்துமாறு கோரி பல முறை கோரிக்கை விடுக்கப்பட்ட போது, சம்பந்தப்பட்டவர்களால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், பெப்ரவரி 14ஆம் திகதியன்று, சட்டவிரோ கட்டுத்துப்பாக்கி வெடித்ததில், சகோதரர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.

இச்சம்பவத்தையடுத்து, அதிகரித்து வரும் சட்டவிரோத கட்டுத்துவக்கு பயன்பாட்டுக்கு எதிராக, ஞாயிற்றுக்கிழமையன்று (23), அப்பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.அமரசிங்க, சட்டவிரோத வெடிபொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குமிடத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக தண்டனைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

இதையடுத்து, நேற்று  (23) போராட்டம் முன்னெடுக்கப்படாது கைவிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .