2026 மே 02, சனிக்கிழமை

பொலிஸார் சுட்டுக்கொலை: ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரண்

Editorial   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன் 

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

நேற்று மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார் இவருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாற்றியதாக கூறி நேற்று அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் பொலிஸ் விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையிலேயே, அவர் இன்று காலை  கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் 

சரணடைந்தவர் முன்னாள் போராளியான வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (வயது 48) என்பவராவார்.

சந்தேக நபரிடம் வாக்குமூலங்கள்  பெற்றப்பட்டதன்  பின்னர், அவரை  குற்றப் புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிஸார் இடையூறு வழங்கியதால், அதற்கு பழிவாங்குவதற்காக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .