Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
தமது போராட்டத்தை வலுவிழக்க செய்யும் நோக்குடன், புதிதாக ஒரு தரப்பு வெளிநாட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு செயற்படுவதாகக் கூறிய வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கலாரஞ்சினி, தமது போராட்டத்தைச் சிதைக்கும் நோக்குடன் அவர்கள் செயற்படுவதாகவும் சாடினார்
கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், குறித்த செயற்பாடு, இதுவரை காலமும் முன்னெடுக்கப்படுகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சர்வதேச ரீதியில், தமது நியாயத்தை கொண்டு சென்றுள்ள நிலையில், தமது போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலேயே, வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாகவும் சிலர் செயற்பட முற்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .