2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

போராட்ட பந்தல் சேதம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்கக் கோரி நடத்தி வரும் போராட்டப் பந்தலுக்கு மேல் மரக் கிளை வீழ்ந்தமையால் போராட்ட பந்தல் சேதத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியா - கண்டி வீதியில், வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்பாக 1,384ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (02) இரவு ஏற்பட்ட கடும் காற்றுக் காரணமாக பந்தல் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் காணப்பட்ட மரத்தில் இருந்து பாரிய கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையால் பந்தல் சேதமடைந்துள்ளது.

இந்தப் பந்தலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான வயோதிப தாய்மார் சிலர் இரவில் தங்கி வருகின்ற போதிலும் அசாதாரண நிலை காரணமாக, சம்பவத்தின் போது பந்தலுக்குள் எவரும் தங்கியிருக்காமையால் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .