Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச் செல்வன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்புடன் ஆட்சிக் குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ள சூழ்நிலையில், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுத்து, திட்டமிடப்பட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முன்வர வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழர் மரபுரிமை பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழர் மரபுரிமை பேரவையினர் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், ஆட்சிக் குழப்ப நிலையில், நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை தொடர்பில் பொது மக்கள் கவலையும் அதிருப்தியும் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மேற்படி பிரதேசத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களின் முந்திரிகைச்செய்கை காணிகளையும் கிறிஸ்தவ சேமக்காலையையும் ஆக்கிரமிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் பிரதேச மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக கைவிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ள பேரவையினர், ஆட்சிக்கு ழப்ப நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தேரர் ஒருவரால் அவசர அவசரமாக புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விரைந்து செயலாற்றுவீர்கள் என நம்புவதாக, அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago