Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'கிளிநொச்சி பூநகரிப் பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு 20 ஆயிரம் லீற்றர் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது. இருந்தும் குடிநீரை விநியோகம் செய்வதற்கான செலவை ஈடுசெய்ய சபையில் வருமானம் போதுமானதாக இல்லை' என பூநகரி பிரதேச சபை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்;டத்தின் அதிகளவான குடிநீர் நெருக்கடி எதிர்கொள்ளும் பகுதியாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது.
பூநகரி பகுதியிலுள்ள 11 கிராமஅலுவலர் பிரிவுகளுக்கு வருடம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க வேண்டியுள்ளது. பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள கறுக்காய்தீவு, செட்டியகுறிச்சி, ஞானிமடம் சித்தங்குறிச்சி, மறவன்குறிச்சி, கொல்லக்குறிச்சி, இராமலிங்கம் வீதி, பரமன்கிராய், வாடியடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்;டுப்பாடு நிலவி வருகின்றது.
ஆனால், தங்களுக்கான குடிநீர் உரிய காலங்களில் கிடைப்பதில்லை என்றும், இதனால் தாங்கள் குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்;வதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச சபையுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,
'கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் மூன்றில் இரண்டு பகுதிக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டிய பகுதிகளாக காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளுக்கு நாளாந்தம் 20 ஆயிரம் லீற்றர் தண்ணீர் விநியோகிக்க வேண்டியுள்ளது. ஆனால், இங்கு குடிநீரைப் பெறக்கூடிய நீர்நிலைகளும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
இதனால் வெளியிடங்;களில் இருந்;து குடிநீரைப் பெற்று வழங்க வேண்டியுள்ளது. இருந்தும் சபையின் வருமானம் போதுமானதாக இல்லாத காரணத்தால் முழுமையாக குடிநீரை வழங்கக்கூடியதாக இல்லை' என பிரதேச சபை மேலும் கூறியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
8 minute ago
10 minute ago
31 minute ago