Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜூலை 02 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
பிரதேசவாதத்திதையும் இனவாத்தையும் பலவீனமானவர்களே தமது ஆயுதமாக பயன்படுத்தவர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே.மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியாவில் பிரதேசவாத்தை ஏற்படுத்தும் முகமாக துண்டுப்பிரசுரங்கள் நகர்ப்பகுதியில் போட்ப்படடிருந்தமைய கண்டிப்பதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளத.
அவர் இறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“வவுனியா மாவட்டமானது மூவின மக்களின் வாழ்விடம். இங்கு பிரதேசவாதத்துக்கோ இனவாதத்துக்கோ இடமில்லை. எனினும் சில பலவீனமானவர்கள் தமது அரசியலை கொண்டு செல்ல இதனையே தமது ஆயுதமாக பயன்படுத்த முனைகின்றனர். இதனால் அவர்கள் எதனையும் சாதிக்கப்போவதில்லை.
தமது அரசியலுக்காக இனவாதத்தை பரப்பி மக்களிடம் தம்மை நல்லவர்களாக காட்டமுனைவது வேடிக்கையானது. மூவின மக்களும் யுத்தகாலத்தில் கூட சகோதரத்துவத்துடன் வாழ்ந்த பூமியே வவுனியா மண். இம் மண்ணில் இன்று சிலர் பிரதேசவாதம் என்ற பூதத்தை கிழப்பி விடுகின்றனர்.இது அவர்களையே அழிக்கவல்லது.
எனவே, வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்தே செயற்படவேண்டும். பொருளாதார மையத்தினை அமைப்பதில் முரண்பாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையே இன்றைய தேவையாகவுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும் உணர்ந்து இவ்வாறு பிரிவினையை ஏற்படுத்துபவர்களை இனம்கண்டு சமூகத்தில் ஒதுக்கிவைக்கவேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
06 Jul 2025