2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாவக்குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன

Gavitha   / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக,  பாவக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியாராஜா தெரிவித்தார்.

இன்றைய காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில்  அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக பாவக்குளத்தின் 4 வான்கதவுகளும் 3 அங்குலத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அத்துடன் செட்டிகுளத்தினால் சிற்பிக்குளத்துக்கு செல்லும் வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகல் அப்பகுதியினூடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவனியா வடக்கில் மன்னகுளம் கிராமத்தில் 7 குடும்பங்கள் வரையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, பிரதான கிராமத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஓமந்தை பகுதியில் குளம் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கமநல சேவைகள் நிலையத்தின் கோரிக்கைக்கமைய மண் மூடைகள் அமைப்பதற்கான பைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.                             
                          

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .