2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மகளிர் தின நிகழ்வு

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், வியாழக்கிழமை (21) மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பூங்கோதை தயாளசீலன், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் பெண் முயற்சியாளர்களால் அமைக்கப்பட்ட சந்தையை மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து முல்லைத்தீவு நகர பகுதியிலிருந்து மாவட்ட செயலகம் வரையான நடைபவனியும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட விழா மண்டபத்தில் பல்வேறு கலைநிகழ்வுகளும், சாதனைப் பெண்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .