Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடுத் திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மடு திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழா, நாளை (06) மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று, ஓகஸ்ட் 15ஆம் திகதி காலை 6.30 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெணான்டோ ஆண்டகை தலைமையில், மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருநாள் திருப்பலியைக் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், மடு திருத்தலத்துக்கு வருகை தரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், மடு திருத்தலத்துக்கு குடும்பங்களாக வாகனங்களில் வரும் பக்தர்கள், தமது பெயர் விவரங்களைப் பட்டியலிட்டு, மடு திருத்தல நுழைவாயிலில், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.
குறித்த பட்டியல் வழங்குவதன் மூலம், சோதனைகளைக் குறைத்துக்கொள்ள முடியுமெனவும், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
5 hours ago