Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 28 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆடித்திருவிழா தொடர்பான இறுதிக் கூட்டம், மடு திருத்தலத்தின் புனித ஜோசப் வாஸ் தியான மண்டபத்தில், இன்று (28) காலை 11 மணிக்கு நடைபெற்றது.
மடு அன்னையின் ஆடி உற்சவம் தொடர்பாக, இதற்கு முன்னர் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதெனவும் அதனையே இறுதி தீர்மானமாக ஏற்றுக்கொள்வதெனவும், இதன்போது முடிவெடுக்கப்பட்டது.
வெளிமாவட்ட யாத்திரிகர்கள் மடு திருவிழாவுக்கு வருவது தவிர்க்கப்பட்டுள்ளதுடன், மடு திருத்தலத்தின் இரண்டு பிரதான பாதை ஊடாக அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே, தேவாலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், தேவையின் நிமித்தம் உள் நுழைபவர்களுக்கு, அன்ரிஜன் பரிசோதனையும் முன்னெடுக்கப்படும்.
திருவிழா திருப்பலி, எதிர்வரும் 2ஆம் திகதி ஆயர் தலைமையில், காலை 6.15 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து, 6 திருப்பலிகள் குறிக்கப்பட்ட நேரத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். ஒரு திருப்பலியில் சுமார் 20க்கும் 30க்கும் இடைப்பட்டோர் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டது.
குறித்த திருப்பலிகளில், மன்னார் மறைமாவட்டத்தின் பங்குகளில் இருந்து தீர்மானிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன், மன்னார் மாவட்டத்தில் தொற்றோடு இனங்காணப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், மடு திருத்தலத்துக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசேடமாக, நாட்டு மக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகப்பதற்கான விசேட வேண்டுதல் செபம் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கூட்டத்தில், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை, மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago