Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 06 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வவுனியா தெற்குப் பிரதேசத்ததிற்குட்பட்ட மடுக்;குளம் கிராமத்துக்கு, போதிய போக்;;குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இன்மையால், கிராமத்தில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன.
வவுனியா - மன்னார் வீதியின் புவரசங்குளம் சந்தியிலிருந்து இரணை இலுப்பைக்குளம் ஊடாக முல்லைத்தீவு துணுக்காய் வரை செல்லும் வீதியில், வேலங்குளம் சந்தியிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில், மன்னார் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள மடுக்குளம் கிராமத்தின் பிரதான வீதி, இன்றுவரை எந்தவித புனரமைப்புக்களும் இன்றி சேதமடைந்து காணப்படுகின்றது.
மழைக் காலங்களில் இவ்வீதியை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதுடன் இங்குள்ள மக்;கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, வவுனியாவுக்கே செல்;ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதற்கேற்ற போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது.
இதேவேளை, இக்கிராமத்தில் உள்ள மடுக்குளம் நவஜோதி வித்தியாலயம் போதிய அடிப்படை வசதிகள் இன்றி, ஆசிரியர் பற்றாக்குறையுடன்இயங்கி வருவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இக்கிராமத்தில் வாழும் குடும்பங்களின் அடிப்படைத் தொழிலாக விவசாயம் காணப்படுவதுடன் காட்டுயானைகளின் தொல்லையும் அதிகரித்;துக் காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
41 minute ago