2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’மணல் அகழ்வுடன் அரசியல்வாதிக்கு தொடர்பு’

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

பூநகரி – கௌதாரிமுனை பகுதியில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வுடன், கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு இயங்கும் பணப்பெட்டி அரசியல்வாதிக்கு தொடர்பிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன், குறித்த அரசியல்வாதி மணல் அகழ்வுக்கு கள்ள அனுமதிகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும், டக்ளஸ் தேவானந்தா எம்.பி குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், அதிகாரங்கள் கையில் கிடைக்குமானால், நந்திக் கடலைத் துப்புரவுச் செய்ய முடியுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .