Editorial / 2023 ஜனவரி 29 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயன் மேற்கில் மது விற்பனை நிலையம் திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் கிராமத்தில் கலந்துரையாடல் ஒன்று இன்று 29.01.2023 முற்பகல் இடம் பெற்றது.
முற்பகல் 11.00 மணியளவில் இக்கிராம பொது அமைப்புகள் இக்கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தன.
இக்கலந்துரையாடலில் ஆரோக்கியபுரம் பங்குத் தந்தை சேகர் கருத்துத் தெரிவிக்கையில்
“ எமது கிராமத்தில் மது விற்பனை நிலையம் திறப்பதற்கு எதிராக இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருக்கின்றோம். கசிப்பிற்கு பதிலாக சாராய விற்பனை நிலையம் திறக்க இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டுமே ஒன்றுதான். ஏற்கனவே, மது விற்பனை நிலையம் திறக்க இருந்த நிலையில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் காட்டப்பட்ட எதிர்ப்பின் காரணமாக மது விற்பனை நிலையம் திறப்பது தடுக்கப்பட்டிருந்தது.
எமது கிராமத்தின் பொது அமைப்புகளின் அனுமதி இல்லாமல் எவ்வாறு மது விற்பனை நிலையத்தினை திறப்பதற்கு அனுமதி வழங்கியது யார். ஒட்டு மொத்தத்தில் எமது கிராமத்தில் மது விற்பனை நிலையம் திறப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
அதுவும் பாடசாலைகள், தேவாலயம், ஆலயங்கள், முன்பள்ளிகள் உள்ள சூழலில் மது விற்பனை நிலையம் திறப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவர்களை நேரடியாக பாதிக்கும். கடந்த காலங்களில் கூட தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் மது விற்பனை நிலையம் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்தல் காலத்தில் மது விற்பனை நிலையம் திறப்பதா. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாகவே உணர்கின்றோம். மது விற்பனை நிலையம் திறப்பதற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடாத்த உள்ளோம். அரச அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பி உள்ளளோம். தகுந்த பதில் கிடைக்காவிட்டால் தொடர் போராட்டம் இடம் பெறும்எனவும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டன.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைப் பகுதியான அக்கராயன் மேற்கில் குறித்த மது விற்பனை நிலையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
45 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
56 minute ago
2 hours ago