Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 10 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - திருகேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரனைகள், மே 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (10), மன்னார் நீதிமன்றத்தில், குறித்த இரு வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.
எனினும் இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா மன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால், பதில் நீதவான் இ. கயஸ் பெல்டானோ தலைமையில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
இதன்போது, விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான், குறித்த இரு வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் மன்னார் மனித புதைகுழி தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட போதிலும், எந்தவித சமர்பிப்புகளும் இடம்பெறவில்லை.
அதேநேரத்தில், திருகேதீஸ்வர மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு தொடர்பாகவும் எதுவித முன்வைப்புகளும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago