Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 18 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
மன்னார், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில், இன்று (18) நள்ளிரவு, ஆம்பன் புயல் தாக்கம் ஏற்பட்டதில், 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில், இன்று நள்ளிரவு பெய்த காற்றுடன் கூடிய கன மழை காரணமாக அதிகமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன், தோட்ட செய்கைகள் பாதிப்படைந்துள்ளது. அத்துடன், அதிகளவான மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
நள்ளிரவு 12 மணி தொடக்கம் கடும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தை அடுத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் 75 குடும்பங்களைச் சேர்ந்த 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில், 28 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேரும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில், 18 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில், 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில், 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில், 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும் பாதிக்கப்படுள்ளனர்.
குறிப்பாக ஜீவபுரம், சாந்திபுரம், ஜிம்றோன் நகர், வஞ்சியன்குளம், தரவான்கோட்டை, வெள்ளாங்குளம், சிறுநாவற்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளும் பாடசாலைகளும் வர்த்தக நிலையங்களுமே, அதிகளவில் சேதமடைந்துள்ளன.
கிளிநொச்சி
அம்பாம் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், பள்ளிக்குடாவில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் கௌதாரிமுனையில், ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் முழங்காவில் பிரதேசத்தில், 2 குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரும் கிராஞ்சியில், 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் பொன்னாவெளியில், 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும் இரணைமாதாநகர் கிராமத்தில், 1 குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகள் முழுமையாகவும் 2 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், திருவையாறு பகுதியில் கிராமசேவையாளர் கட்டடம் மற்றும் முன்பள்ளி கட்டடங்களின் கூரைத்தகடுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.
மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையங்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
12 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
15 minute ago