Freelancer / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இரவு 10 மணி அளவில் கேஸ் அடுப்பு தீப்பற்றி எரிந்ததுடன் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையில் திடீரென அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்திய மையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் உரிய வீட்டார் தெரிவித்துள்ளனர்
அதே நேரம் தீப்பற்றிய வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரிலோ, ரெகுலேட்டர்களிலோ, வயர்களிலோ எந்த தீ பரவலும் ஏற்படவில்லை என்பதுடன் அடுப்பு மட்டுமே தீ பற்றி எரிந்ததுடன் வெடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago