2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மன்னாரிலுள்ள இலத்திரனியல் காட்சியறையில் தீ

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் அமைந்துள்ள அபான்ஸ் காட்சியறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள அபான்ஸ் காட்சியறை வழமை போல் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு மூடப்பட்டுள்ளது.

எனினும் இரவு 9 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்தில் திடீர் என தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள வர்த்தகர்களும், மக்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

அத்துடன், வர்த்தகர்களும், பொது மக்களும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் குறித்த காட்சியறையின் கீழ் பகுதி மற்றும் மேல் மாடியிலும் தீ பரவியது.

வவுனியா தீ அனைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இரவு 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வருகை தந்த வவுனியா தீ அனைப்பு பிரிவினர் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் நீண்ட நேரத்தின் பின் குறித்த தீ இரவு 11.45 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

மேலதிக விசாரணைணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .