2025 மே 01, வியாழக்கிழமை

மன்னாரில் கண்டனப் போராட்டம்

Niroshini   / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (31) காலை 9 மணியளவில், கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்;ட பலரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .