Niroshini / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்களால், மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால், இன்று (07) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காலை 9 மணி தொடக்கம் காலை 11 மணி வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்க கோரியே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக தற்போதைய கொரோனா காலப்பகுதியில் தமது சாதாரண கடமையை விட தற்போது அதிக நேரம் கடமையாற்றுவதாகவும், குறிப்பாக அன்ரடிஜன், பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை பராமறித்தல் உள்ளிட்ட மேலதிக கடமைகளை மேற்கொண்டாலும், இதுவரை தமக்கான மேலதிக நேர கொடுப்பனவை வழங்கவில்லை என, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, தமது கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை, வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கும் வகையில், மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் கையளித்தனர்.
இதன்போது மகஜரை பெற்றுக் கொண்டு கருத்துரைத்த ரி.வினோதன், மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
குறித்த மகஜரை வடமாகாண ஆளுநருக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அவர் தெரிவித்தார்.
35 minute ago
41 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
41 minute ago
50 minute ago