2025 மே 22, வியாழக்கிழமை

மன்னாரில் தொடர் மின் தடங்கள்; ‘நடவடிக்கை எடுப்பதாக ரவி உறுதி’

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் மாவட்டத்தில், தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மின் தடை தொடர்பில் உடன் மேற்கொள்வதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றமை தொடர்பில், இன்று (07) ஊடகங்களுக்குக் கருத்து்த தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து ​தொடர்ந்துரைத்த அவர், தற்போது, உயர் தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில், அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால், பரீட்சை எழுதும் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக, இவ்வாறு மின் தடைப்படுவது, மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த மின் தடங்கள் தொடர்பில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இன்றைய தினம் நாடாளுமன்றத்தில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்து, அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த வேண்டுகோளுக்கு அமைவாக, உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுவதாக, அமைச்சர் உறுதியளித்ததாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .