Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
பயணக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர் பகுதியில், மக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, இன்றைய தினம் (02) காலை தொடக்கம், சிலர் அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கும் அதேநேரம், பலர் அத்தியாவசிய காரணங்கள் இன்றியும் நகர் பகுதிகளை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளனர்.
அத்துடன், இன்றைய தினம் (02), வங்கி நடவடிக்கைகளும் இடம்பெறுகின்ற நிலையில், மக்களின் நடமாட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும், மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில், கடந்த மாதம், கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நிலையை மதிக்காது செயற்படுகின்றனர்.
மேலும், அனுமதிபெறாத பல வர்த்தக நிலையங்கள் மற்றும் மரக்கறி வியாபார நிலையங்கள், மக்களை அதிகளவில் ஒன்றுகூட்டி, விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, பயணங்களைத் தொடரவும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும் பாஸ் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு, அதிகளவானவர்கள் மாவட்டச் செயலகத்துக்குச் சென்று வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
52 minute ago