2025 மே 05, திங்கட்கிழமை

மன்னாரில் விசேட கண்காணிப்பு

Niroshini   / 2021 மே 23 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடளாவிய   ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மன்னார்  மாவட்டம் 2ஆவது நாளாகவும்  இன்றையதினம் (23) முழுமையாக முடங்கியுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் முழுமையாக வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மன்னார் நகரில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அத்தியாவசிய தேவைகளின்றி நடமாடுபவர்கள் மற்றும் பயணங்களை மேற்கொள்பவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X