2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னாருக்கு கிங்ஸ்லி ரணவக்க விஜயம்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, நேற்று   மாலை மன்னார் போக்குவரத்து பிரதான சாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வடக்கு மாகாண போக்குவரத்து சாலைகள் தொடர்பாக காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் நிர்வாகச் சிக்கல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காகவே, அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது, மன்னார் போக்குவரத்து சாலையின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக மன்னார் போக்குவரத்து சாலை முகாமையாளரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக மன்னார் போக்குவரத்து சாலைக்கான பஸ்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாகவும் அலுவலகம் மற்றும் ஊழியர்களுக்கான நிர்வாக தேவைகள் தொடர்பாகவும் தற்போது தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களின் நிரந்தர நியமனம் வழங்குதல் தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மன்னார் சாலை முழுவதுமாக ஆராய்ந்த தலைவர், பழுதடைந்துள்ள நிலையில் காணப்படும் பஸ்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் பஸ்களுக்கான வர்ணம் பூசும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பணித்தார்.

அதே நேரத்தில் மன்னார் நகரசபைக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவையினருக்குள் காணப்படும் பிரச்சினை தொடர்பாக உடனடியாக ஆளுநர் மற்றும் உரிய அதிகாரிகளுடன்   கலந்தாலோசித்து தீர்வை பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய பொறுப்பதிகாரி  ராஜ கருணா, இலங்கை போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அருணாஜித் சிங் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .