2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மன்னார் நிவாரணங்கள் ’காலி’க்கு அனுப்பி வைப்பு

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஜூன் 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்ட செயலகத்தால் சேகரிக்கப்பட்ட  ஒரு தொகுதி அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் காலி மாவட்டத்துக்கு, இன்று (02) காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேசச் செயலகங்களினூடாக, கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம், நேற்று மாலை கையளிக்கப்பட்டன.

மன்னார் பிரதேச செயலாளர் பரமதாஸ், நானாட்டான் பிரதேசச் செயலாளர் சிறிஸ்கந்தகுமார், முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மாந்தை மேற்கு பிரதேச்ச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்தியசோதி ஆகியோர் தமது பிரதேச செயலகங்களினூடாக சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய நிவாரணப்பொருட்களை  கையளித்தனர்.

இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் கலந்து கொண்டிருந்தார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .