எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 ஜனவரி 25 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, மடு சந்தியில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று (25) வெள்ளிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மடு பிரதேச செயலாளர் பிரிவில் மடுச் சந்தியில் வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாரம்பரிய உணவகத்தை வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் திறந்து வைத்தார்.
இதன்போது, நானாட்டான் பிரதேச சபைத்தலைவர், மடு பிரதேச செயலாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மடு கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாச உறுப்பினர்கள் அக்கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
26 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago