எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க நாளை (23) புதன்கிழமை காலை கொழும்புக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

குறித்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (22) காலை இடம்பெற்றது.
134 ஆவது தடவையாக குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் நீதவான் மற்றும் விசாரணைக்குழு அதிகாரிகள் இடையில் இடம்பெற்றது.
இந்நிலையில் நாளை புதன்கிழமை (23) காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்தில் இருந்து கொழும்பு விமான நிலையத்துக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை குறித்த அகழ்வு பணிகளின் போது 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 294 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago