Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் தேனீ வளப்ப்புச் சங்கங்கங்கள் உருவாக்கப்பட்டு வருவதுடன், வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகவும் தேனீ வளர்ப்புக்கான திட்டத்தை மன்னார் மாவட்ட விவசாய திணைக்களத்தின் தேனீ வளப்பு பிரிவு முன்னெடுத்து வருகிறது என்று, விவசாய திணைக்கள பயிர் பாதுகாப்பு, தேனீ வளர்ப்புக்கு பொறுப்பதிகாரி விவசாயப் பாடவித உத்தியோகத்தர் எஸ்.ஏ.லெம்பேட் தெரிவித்தார்.
மன்னார் - உயிலங்குளம் விவசாய ஆராய்ச்சி நிலையத்தில், இன்று (27) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தற்பொழுது உலக நாடுகளில் தேனீ வளர்ப்புக்கு முக்கியம் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் தேனீ வளர்ப்புக்கு எமது திணைக்களம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கமைய 2005லிருந்து 2018 வரைக்கும் தேனீ வளர்ப்புக்காக வருடந்தோறும் நூறு தேனீ வளர்ப்புக்கான பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
“இந்தத் திட்டத்தை இலவசமாகவும் மானிய அடிப்படையிலும் முன்னெடுத்து வருகின்றோம். மன்னார் மாவட்டத்தில் பாலம்பிட்டி, தட்டசனாமடு, கீரிச்சுட்டான் போன்ற இடங்களில் சங்கங்கங்கள் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
“தேனீ வளர்ப்பானது எம்மில் சிலருக்கு ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கலாம். ஆனால் இது ஒரு பொழுது போக்குமட்டுமல்ல இலாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாகவும் அமைகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago