Editorial / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
விவசாய செய்கையின் போது, கலைநாசினி பயன்படுத்தப்படுகின்ற போதும், அதிக விலைக்கு தரமற்ற கலை நாசினி விற்பனை செய்யப்பட்டு வருவதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, புல் மற்றும் ஏனைய கலைகள் வளர்வதை கட்டுப்படுத்த குறித்த கலைநாசினி பயன்படுத்தப்படுகின்ற போதும், நெற்பயிரை விட புல் மற்றும் ஏனைய கலைகள் வளர்ந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். விற்பனை செய்யப்படுகின்ற கலைநாசினிகள் கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதும், தரமற்றதாக காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் குறித்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே நிர்னயிக்கப்பட்ட விலையில் தரமான மருந்து வகைகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், விவசாயிகள் நீர் பிரச்சினை மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் கடனைப் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் விவசாயிகள் இறுதியில் ஏமாற்றத்தை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மருந்து தெழித்து சில தினங்களில் உரம் போட வேண்டிய நிலை உள்ளது. எனினும் உரத்தை உடனடியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இப்பிரதேசத்தில் உரத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உரத்தை, வர்த்தகர்கள் இறக்குமதி செய்தவுடன் முடிவடைந்து விடுகின்றது. இதனால் அவசர தேவைகளுக்கு உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மூடை உரம் நிர்ணயிக்கப்பட்ட விலையாக 2,500 ரூபாயாக காணப்படுகின்றது. ஆனால் இப்பிரதேசத்தில் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே, கலைநாசினி தொடர்பிலும் அதி கூடிய விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது விவசாய செய்கையை உரிய முறையில் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago