2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் ஆர்ப்பாட்டம்

George   / 2015 நவம்பர் 10 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாடுசெய்த கவனயீர்ப்பு போராட்டம், மன்னாரில்  இன்று செவ்வாய்க்கிழமை(10) காலை நடைபெற்றது.

தீபத்திருநாளான இன்று, அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளார் தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டம், மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி   மன்னார் பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலக வீதியை சென்றடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .