Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 16 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இதுவரை 57 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் முஹமட் றியாஸ் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டு பொது கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நானாட்டான் பிரதேச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனைவரும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, மன்னார் - யாழ் பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட எமில்நகர், சாந்திபுரம், ஜீவநகர், சௌத்பார் ஆகிய கிராமங்கள் வெள்ள நீரினால் சூழ்ப்பட்டுள்ளன.
வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மன்னார் நகர சபை மேற்கொண்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago