Niroshini / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - பெரியபரந்தன் வட்டாரத்தில் தொடங்கப்பட வேண்டிய மயானம் வேலைகள், இன்னும் தொடங்கப்படவில்லை என, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் இ.இளங்கோ தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், 2020ஆம் ஆண்டில், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, உருத்திரபுரம் சனசமூக நிலையம் ஊடாக, வேலைகளுக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டது என்றார்.
பின்னர், மயானம் வேலையை முன்னெடுக்க முடியாது இருப்பதாக பிரதேச சபைக்கு உருத்திரபுரம் சனசமூக நிலையம் தெரிவித்திருந்ததாகத் தெரிவித்த அவர், பின்பு உமையாள்புரம் சனசமூக நிலையம் ஊடாக மயான வேலைகளை முன்னெடுப்பதற்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தன எனவும் கூறினார்.
உமையாள்புரம் சனசமூக நிலையம் பரந்தன் வட்டாரத்துக்குள் அடங்குவதன் காரணமாக, பரந்தன் வட்டாரத்தின் காஞ்சிபுரம் பகுதியில், மயான வேலையை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் எனவும், அவர் கூறினார்.
'இறுதியாக நடைபெற்ற சபை அமர்வில் 2020இல் பெரியபரந்தன் மயான வேலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு இதுவரை வேலைகள் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக தவிசாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வட்டாரத்துக்குரிய மயான வேலைக்கென 2020இல் ஒதுக்கப்பட்ட நிதி, வேறு வட்டாரத்துக்கு மாற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது' எனவும், இளங்கோ தெரிவித்தார்.
10 minute ago
33 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
38 minute ago
48 minute ago