Niroshini / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 24ஆம் திகதி, ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில், மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதையடுத்து, புளியங்குளம் வைத்தியசாலைக்கு சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வவுனியா வடக்கு சுகாதார பிரிவினரால் மரண சடங்கில் கலந்துகொண்ட நெருங்கிய உறவினர்கள் 30 பேருக்கு, இன்றைய தினம் (30) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதையடுத்து, அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் மரணச்சடங்கில் பங்கேற்ற ஏனையவர்களை இனங்கண்டு பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதோடு, சுகாதார பிரிவினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.
13 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago