2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மரம் கடத்தலுக்கு ஒத்துழைத்த பொலிஸார் பணிநீக்கம்

Menaka Mookandi   / 2016 நவம்பர் 03 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை (02)அதிகாலை ஒரு மணியளில், கிளிநொச்சி - அக்கராயன் காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக வெட்டிய பதினாறு முதிரை மரக்குற்றிகளை, கிளிநொச்சி நகருக்கு கொண்டுசெல்ல உடந்தையாக இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களே, இவ்வாறு, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவா்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி, அக்கராயன், முட்கொம்பன் காட்டுப் பகுதிகளில், சட்டவிரோத மரம் கடத்தல் இடம்பெற்று வருகிறது என, பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

கடந்த வாரமும், பாரவூா்தி ஒன்றில் கடத்தப்பட தயாராக இருந்த பல இலட்ச ரூபாய்கள் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை, அக்கராயன் பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .