2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’மருதன்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழ் செய்கை முன்னெடுப்பு’

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மருதன்குளம் தவிர்ந்த ஏனைய குளங்களின் கீழ் முழுமையாக சிறுபோகச் செய்கைகளை மேற்கொள்ளகூடியதாக உள்ளதாக, மாவட்டப் பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த திணைக்களம், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 வரையான பாரிய நடுத்தர நீர்ப்பாசனக் குளங்கள் காணப்படுகின்றனவெனவும் கடந்தாண்டு பெய்த பருவமழை காரணமாக, 20 குளங்களிலும் முழுமையாக நீர் சேமிக்கப்பட்டதாகவும் கூறியது.

இருந்தபோதும், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருதன்குளம் உடைப்பெடுத்து குளத்தின் நீர் வெளியேறியதாகவும்

இதனால், மருதங்குளம் தவிர்ந்த ஏனைய 19 குளங்களிலும் முழுமையாக நீர் சேமிக்கப்பட்டு, காலபோக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருதங்குளம் உடைப்பெடுத்து நீர் வெளியேறியுள்ள போதும், 40 ஏக்கர் வரையான சிறுபோக செய்கையை மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும், திணைக்களம் ​கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .