Editorial / 2023 மார்ச் 02 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இன்றுக்காலை கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடரி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவிமீது தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதனைதடுக்க சென்ற மனைவியின் தாயார் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பெரிய உலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது 60), என்ற பெண் பலியானார், அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது 37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை முன்னெடுத்த நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஸ்தலத்துக்கு விரைந்த உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
26 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
58 minute ago
1 hours ago