2025 மே 12, திங்கட்கிழமை

மழை வேண்டி வழிபாடு

Niroshini   / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

விவசாயிகள் விவசாயம் செழிக்க மழை வேண்டி, அம்பலவன் பொக்கணை கிராமத்தில், வெளிவயல் பிள்ளையார் கோவிலில் பொங்கல் பொங்கி படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

கடந்த நான்கு மாதங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் சரியான பருவகால மழைவீழ்ச்சி இதுவரை இல்லாத நிலையில் விவசாயிகள் காலபோக நெற்செய்கையை முன்னெடுத்து உள்ளார்கள்.

இந்நிலையில், அம்பலவன் பொக்கணை கிராமத்தில் உள்ள பச்சைப்புல்மோட்டைவெளி, காயாவடி, குஞ்சுப்புலவு, கோயிலடித்துறை, அல்லிப்பள்ளம், விளாத்திவெட்டுவான், நீராவிவெளி, உணாவில், பூவரசம்மோட்டை, நெல்லிமோட்டை, றோட்டுப்பிலவு, உள்ளிப்பிலவு உள்ளிட்ட வயல்வெளிகளை சேர்ந்த 600 ஏக்கர் வரையில் விவசாயம் செய்து வருகின்றார்கள்.

இன்னும் பத்து நாள்களுக்குள் மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என்றால், விவசாயிகள் விவசாய நடவடிக்கையை கைவிடவேண்டிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X