2025 மே 19, திங்கட்கிழமை

மஸ்தான் எம்.பி மீது வாள்வெட்டு முயற்சி

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது, நேற்று (29) இரவு, தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது பாதுகாவலர் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா - பாவக்குளம் பகுதியில், மக்கள் சந்திப்புகளை முடித்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மஸ்தான் எம்.பி, பாவக்குளம் கிராமப் பகுதியில் ஒருவரை இறக்குவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, அப்பகுதியில் நின்ற சிலர், வாள்களால் வெட்டித் தாக்க முயற்சித்துள்ளனர்.

இதன்போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், குறித்த தாக்குதல் முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது, பாதுகாவலர் ஒருவரின் கை காயமடைந்துள்ளது.

இந்நிலையில், எம்.பியைத் தாக்க முற்பட்டவர்கள் தப்பியோடியதை அடுத்து, காயமடைந்த பாதுகாவலர்,  வுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X