2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாணவன் மீது தாக்குதல்

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

தன்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் ஆதரவாளர் என்று  அடையாளப் படுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர், மாணவன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இன்று பாடசாலைக்கு சென்று வீடு திரும்புவதற்காக பாடசாலை நுழைவாயிலில் இருந்து வெளியேறிய போதே குறித்த மாணவனுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன், திருநகர் பகுதியை சேர்ந்தவரெனத் தெரியவந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவன், கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .