2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாணவர்களுக்கிடையே மோதல்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி கூட்டுறவாளர்  மண்டபத்தில் நேற்று (12) நடைபெற்ற க.பொ.த சாதாரண தர  பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது,  மாணவக் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20க்கும் மேற்பட்ட கதிரைகளும்  அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள சுமார் 2,600 வரையான மாணவர்கள் கூட்டுறவாளர் மண்டபத்துக்குச் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மண்டபத்துக்குள் சுமார் 1,200 மாணவர்கள்  மாத்திரமே அமர்ந்திருக்க முடியும்.  இதனால் ஆரம்பத்திலேயே சில மாணவர்களிடையே முறுகல்  நிலை ஏற்பட தொடங்கியது. ஒரு கட்டத்தில்  மாணவர்கள் சிலர் அடிதடியில் ஈடுப்பட்டனர். கதிரைகளாலும் பரஸ்பரம் தாக்கிகொண்டனர். பின்னர்  மண்டப வளாகத்திலிருந்து வௌியேறிய மாணவர்கள் வீதியிலும் மோதிக்கொண்டனர்.

கையில் பொல்லுகளுடன் சில மாணவர்கள்  அடிதடியில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் போது ஒரு மாணவனின் கழுத்து சிறிய கத்தி ஒன்றினால் வெட்டுப்பட்டுள்ளது.

வெட்டுக்காயங்களுக்குள்ளான மாணவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நிகழ்வு ஏற்பாட்டுக் குறைப்பாடும் இதற்கு காரணம் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .