2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவர்களைப் புறக்கணிக்கும் பஸ்கள்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - ஏ-9 சாலையில் பயணிக்கின்ற பஸ்கள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என்ற முறைப்பாடு வலயக் கல்விப் பணிமனைக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றது.

2010ஆம் ஆண்டில் இருந்து பச்சிலைப்பள்ளி, கண்டாவளை, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களில் நடைபெற்றுவரும் கூட்டங்களில் பாடசாலைகளுக்குச் செல்கின்ற மாணவர்களை பஸ்கள் ஏற்றாததன் காரணமாக, மாணவர்கள் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.

பஸ்கள் மாணவர்களை ஏற்றுவதற்குரிய வழிகளை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பளை மத்திய கல்லூரிக்கு முகமாலை, இயக்கச்சிப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களை, பஸ்கள் ஏற்றுவதில்லை. இயக்கச்சி, உமையாள்புரம் மாணவர்களை பரந்தன் நகரம், கிளிநொச்சி நகரம் என்பவற்றுக்கு மாணவர்களை பஸ்கள் ஏற்றுவதில்லை.

அதேபோல், தருமபுரம் மத்திய கல்லூரி, முருகானந்தாக் கல்லூரி என்பவற்றிற்குச் செல்லும் மாணவர்களை, பரந்தன் முல்லை சாலையில் பயணிக்கின்ற பஸ்கள் ஏற்றுவதில்லை. திருமுறிகண்டியில் இருந்து கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களை பஸ்கள் ஏற்றுவதில்லை.

இதேபோன்று, முழங்காவில் மகா வித்தியாலயம், பூநகரி மகா வித்தியாலயம் என்பவற்றிற்குச் செல்லும் மாணவர்களையும் பஸ்கள் ஏற்றுவதில்லை என்ற முறைப்பாடுகள் வலயக் கல்விப் பணிமனைக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பஸ்கள் மாணவர்களை ஏற்றுகின்ற சமயத்தில் கூட, வடமாகாணத்துக்குள் பயணிக்கின்ற பஸ்களே கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை.

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போக்குவரத்தால் பாதிக்கப்படும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .